இதுவே பெரிய சாதனை தான்: ஆஸ்கார் விருது குறித்து விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகிய ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது ’இதுவே பெரிய சாதனை’ என வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படமாக தேர்வு செய்யப்பட்டது.
எஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கத்தில் உருவாகி இந்த படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்று வந்ததால் ஆஸ்கர் விருதையும் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப்பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பட்டியலில் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெறவில்லை.
இதனால் விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்துடன், ‘ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்பதை பார்ப்பதே பெரிய சாதனை என்றும், இறுதி பட்டியலில் ‘கூழாங்கல்’ படம் இடம் பெற்று இருந்தால் எங்களை போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்த்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
:( to check if our film has come in the list itself is a big achievement,yes ! But still! The happiness & pride that we could have brought in to independent cinema makers and producers like us would have been remarkable! If we could have made it to the short list! ?? @TheAcademy https://t.co/mMICm22Hxb
— Vignesh Shivan (@VigneshShivN) December 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments