காதல்-நட்பு: நண்பர்கள் தினத்தில் நயன்தாரா குறித்து விக்னேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரிலும் பலர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் குறித்து பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா குறித்து கூறியதாவது: இந்த காதலில் அளவுக்கதிகமான நட்பு இருக்கின்றது. அதேபோல் எங்கள் நட்பிலும் ஏராளமான காதல் இருந்து கொண்டிருக்கின்றது' என்று கூறி நயன்தாராவுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதேபோல் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அனிருத் குறித்து விக்னேஷ் சிவன் கூறியபோது, 'என்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதர், எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும் நபர், எனது வாழ்க்கையின் கடினமான காலங்களில் உடன் இருந்தவர், என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமானவர் அனிருத். அவருக்கு எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments