நீதான் என் வெற்றி: நயனுக்காக உருகி உருகி பதிவு செய்த விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீதான் என் வெற்றி, நீதான் என் முழுமை, நீ தான் என் எல்லாமும் என்றும் காதலி நயனுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நயன்தாராவுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள தங்கமே! இப்போது நீ என் கண்மணி! என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருந்து வருவதற்கு நன்றி. நீ எனக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதே ஒரு இனிமை. நீ எனக்காக இவ்வளவு அழகாய் இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாக உணரும்போதும நீ என்னுடன் இருந்து இருக்கிறாய், நீ என்னுடன் நின்ற விதம், என்னை முடிவுகள் எடுக்க வைத்தது மற்றும் நீ எவ்வளவு எனக்கு உறுதுணையாக இருந்தாய் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது
என்னையும் என் படத்தையும் முழுமைப்படுத்தியது நீ தான். இந்த படத்தின் வெற்றி உனது வெற்றி. இன்று நீ திரையில் ஜொலிப்பதை காணவும், மீண்டும் உன்னை இயக்கி உன்னிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு ஒரு இயக்குனராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
உன்னுடைய புத்திசாலித்தனமான செயல் என் மனதை எப்போதுமே கவரும் அனுபவமாக இருக்கும். ஏற்கனவே நாம் திட்டமிட்டபடி ஒரு நல்ல படத்தை உருவாக்கி, காதம்பரிக்கு இணையான நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. நீ கண்மணி கேரக்டரிலும் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com