'பாவக்கதைகள்' நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தது இவரா? விக்னேஷ் சிவன் உடைத்த ரகசியம்!

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’பாவக்கதைகள்’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. சுதா கொங்கராவின் ’தங்கம்’, விக்னேஷ் சிவனின் ’லவ் பண்ணா உட்றனும்’ கௌதம் மேனனின் ’வான்மகள்’ மற்றும் வெற்றிமாறனின் ’ஓர் இரவு’ ஆகிய நான்கு படங்கள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’லவ் பண்ணா உட்றனும்’ என்ற பகுதியில் அஞ்சலி, கல்கி உள்பட பலர் நடித்து இருந்தனர் என்றாலும் இந்த பகுதியில் நரிக்குட்டி என்ற கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. ’உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாஃபர் சதீக்’ என்பவர் இந்த கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அவருடைய கேரக்டருக்கு மிக பொருத்தமாக வாய்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சற்று முன்னர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நரிக்குட்டி டைரக்டருக்கு வாய்ஸ் கொடுத்தது பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்ற ரகசியத்தை உடைத்துள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது

மிகவும் மனிதநேயமுள்ள தேனி ஈஸ்வர் அவர்களுடன் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் நரிக்குட்டி கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்ததற்கு நன்றி’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

’பாவக்கதைகள்’ நரிக்குட்டி கேரக்டருக்கு குரல் கொடுத்தது இவரா? என்று நெட்டிசன்கள் தற்போது ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்