'தாதா 87' இயக்குனருக்கு உதவிய விக்னேஷ் சிவன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ‘தாதா 87 2.0’ என்ற படம் குறித்த அறிவிப்பை விஜய்ஸ்ரீ சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திலும் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விஜய்ஸ்ரீ இயக்கும் மற்றொரு படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது என்பதும் இந்த படத்தில் ‘தடம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வித்யா பிரதீப் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘பவுடர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வித்யா பிரதீப், மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜீ மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினாரா கமல் பட நாயகி? 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிர்வாகம் விறுவிறுப்பாக செய்து வருகிறது

கோவா ட்ரிப் சென்ற விஜய் பட நடிகை டிரைவரை ஏமாற்றினாரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடித்த 'போக்கிரி' படத்தில் இடம்பெற்ற 'என் செல்லப்பேரு ஆப்பிள்' என்ற பாடலில் நடித்திருந்தவர் கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் 'வேட்டையாடு விளையாடு' 'கந்தசாமி' உள்பட பல படங்களில் ஒரு

முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.