'தாதா 87' இயக்குனருக்கு உதவிய விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ‘தாதா 87 2.0’ என்ற படம் குறித்த அறிவிப்பை விஜய்ஸ்ரீ சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திலும் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விஜய்ஸ்ரீ இயக்கும் மற்றொரு படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது என்பதும் இந்த படத்தில் ‘தடம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வித்யா பிரதீப் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘பவுடர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
வித்யா பிரதீப், மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜீ மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Best wishes to the Team@vijaysrig Directorial &Team#powder #பவுடர் #AVijaySriGmakeup @Vidya_actress @manobalam #Vaiyapuri @Adhavana @iamakalya@RajaDop1 @leanderleemarty@onlygmedia @onlynikil #NM #PowderPongal #NikilMurukan #NMNews23 ?????????????? pic.twitter.com/wE1s9SFPh7
— Vignesh Shivan (@VigneshShivN) October 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com