மழையை ரசிக்கும் நயன்தாரா: விக்னேஷ் சிவன் வெளியிட்ட க்யூட் வீடியோ

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மழையை ரசிக்கும் வீடியோவை அவரது காதலர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றனர் என்பதும் தற்போதும் அவர்கள் அங்கு தான் விடுமுறையை கழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துபாயில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்டாக அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் துபாயில் பெய்யும் மழையை நயன்தாரா ரசித்து பார்ப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற நான் பிழை’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.