விக்கி-நயன் திருமணத்திற்கு எங்களையும் கூப்பிட்டிருக்கலாம்: நெருங்கிய உறவினர் வருத்தம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை மிகச் சிறப்பாக நடந்ததை அடுத்து பல இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்து அளிக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இன்று சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியம்மா, தங்களை இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று உருக்கமாக கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சிறுவயதில் விக்னேஷ் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் வீட்டிற்கு தான் வருவான் என்றும் எங்களுடன் மிகவும் பாசமாக இருப்பான் என்றும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் கலந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம் என்றும், ஆனால் எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறினார் .

இருந்தாலும் அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் திருமணத்திற்குப் பிறகாவது விருந்துக்கு வந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.