நயன்தாரா படத்திற்கு புரமோஷன் செய்த விக்னேஷ் சிவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வீடியோவாக இசையமைப்பாலர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புரமோஷன் வீடியோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோவை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு புரமோஷன் செய்துள்ளார் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன். இந்த புரமோஷனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Jul 3, 2018 at 6:10am PDT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments