கைவிட்டு போன அஜித் பட வாய்ப்பு.. 'நானும் ரெளடி தான்' பாடலை பதிவு செய்த விக்னேஷ் சிவன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் இதனை அடுத்து ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனதை தனது சமூக தளத்தில் ஆதங்கத்துடன் மறைமுகமாக பலமுறை விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’நானும் ரெளடி தான்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
‘சில பாடல் வரிகள் மிகப்பெரிய அர்த்தங்களை உள்ளடக்கி இருக்கும்’ என்று தெரிவித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது:
கிடைச்சத இழக்குறதும்…
இழந்தது கிடைக்குறதும்…
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி…
குடுத்தத எடுக்குறதும்…
வேற ஒன்ன குடுக்குறதும்…
நடந்தத மறக்குறதும்…
வழக்கம் தானடி
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் தனது திறமையை நிரூபித்து ஹாலிவுட் திரை உலகில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com