அம்மாவின் பிறந்த நாளில் அழகிய கவிதை எழுதிய விக்னேஷ் சிவன்.. க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விக்னேஷ் சிவன் தாயார் மீனாகுமாரி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அம்மாவுக்காக அழகிய கவிதையை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
மேலும் அம்மாவின் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அம்மாவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய அழகிய கவிதை இதோ:
சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்
விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ ஓ
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே ஓ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com