புதிய டைட்டில்.. புதிய ஃபர்ஸ்ட் லுக்.. விக்னேஷ் சிவன் அடுத்த படத்தின் டைட்டில் மாற்றம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 23 2024]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படத்திற்கு ’எல்ஐசி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் மாற்றப்பட்டு புதிய டைட்டிலுடன் கூடிய புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வந்த ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற டைட்டில் சுருக்கமாக ’எல்ஐசி’ என்றழைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த டைட்டிலுக்கு ’எல்ஐசி’ நிறுவனத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாகவும் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

இருப்பினும் இந்த டைட்டிலை மாற்றுவது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய டைட்டிலுடன் கூடிய புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ஒரு பேட்டியை படித்துவிட்டு ஓடோடி போய் உதவி செய்த சிவகார்த்திகேயன்.. நெகிழும் இயக்குனர் மனைவி..!

மறைந்த இயக்குனர் ராசுமதுரவன் மனைவி பேட்டி ஊடகத்தில் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பேட்டியை படித்து அவருடைய குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவினுடன் நெருக்கமாக நயன்தாரா.. நன்றி அரோகரா சொன்ன இயக்குனர்.. தொடங்கியது பயணம்..!

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின்

உதட்டில் சிகரெட்.. நடையில் ஸ்டைல்.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் வீடியோ வைரல்..!

சூர்யா நடித்து வரும் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி உள்ள

அருள்நிதி அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அருள்நிதி நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்காக விஜய் செய்ய போவது இதுதான்.. அதிரடி அறிவிப்பு..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' படத்தின் ப்ரோமோஷன் பணியில் விஜய் உதவி செய்ய இருப்பதாக வெளியான செய்தியையும் குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து