ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன்? நயன் - விக்கியின் வேற லெவல் பிளான்!
- IndiaGlitz, [Wednesday,August 31 2022]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் திருமணச் செலவு முழுவதையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் இதனை அடுத்து நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை பெற்றதாகவும், இந்த வீடியோ விரைவில் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திருமணத்தை அடுத்து தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு தேனிலவு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியின் முழு செலவையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருமணம் போலவே தேனிலவுக்கும் நயன் - விக்கி தம்பதிக்கு ஒரு பைசா செலவில்லை என கூறப்படுகிறது.
மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் போட்டோகிராபர் ஒருவரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் சென்றுள்ளதாகவும் அவர் தான் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவின் திருமண வீடியோவில் தேனிலவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.