விக்னேஷ் சிவனுடன் அவ்வளவு நெருக்கமானவரா பிக்பாஸ் சம்யுக்தா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்றும் கலீஜ் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை கோபப்படுத்தியதால் அடுத்த வாரமே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருப்பார் என்பதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் சம்யுக்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து திரையுலக வட்டாரங்கள் கூறியபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் சம்யுக்தாவும் ஒருவர் என்றும் இந்த புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படங்கள் என்றும் கூறிவருகின்றனர். விக்னேஷ் சிவனின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களில் ஒருவர் சம்யுக்தா என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக உள்ளது.