தோனிக்கே பாதுகாப்பு அதிகாரியாக இருந்த விக்னேஷ் சிவன் அம்மா: ஆச்சரிய புகைப்படம்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணி வந்திருந்தபோது சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அதிகாரியாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மா தான் இருந்தார் என்பது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தல தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்தார் என்பதும் சிஎஸ்கே அணிக்காக எடுக்கப்பட உள்ள விளம்பர படத்தை அவர் தான் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிஎஸ்கே அணி சென்னை வந்தபோது அந்த அணியின் பாதுகாப்புக்கு தனது அம்மாதான் இன்சார்ஜாக இருந்தார் என்றும் அப்போது அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால் அது சாத்தியமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் தனது அம்மா தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் அதனை தான் வெகு தூரத்தில் இருந்தபடியே தோனியை ரசித்து பார்த்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனியுடன் தனது அம்மா போலீஸ் உடையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் தோனியிடம் இருந்து தலைமைப் பண்பை கற்றுக் கொண்டதாகவும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏங்கி இருந்ததாகவும் ஆனால் அப்போது வாய்ப்புகள் அமையவில்லை என்றும் தற்போது அவர் நடிக்கும் விளம்பர படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். விடா முயற்சி செய்து உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பதற்கு தோனி ஒருவரே சிறந்த உதாரணம் என்றும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ள தருணங்களை வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது என்றும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

திருமணத்தால் பிசியாகி விட்டேன்… மலையேற்றத்தில் ஈடுபட்ட 62 வயது பெண்ணின் மாஸ் வீடியோ!

திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய

5,300 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? வைரலாகும் மண்டையோட்டு ரகசியம்!

ஸ்பெயின் நாட்டு கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டை

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு கொரோனா… சோகத்தில் ரசிகர்கள்!

பாப் இசை உலகில் பல அடுக்கடுக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருப்பவர் பாடகர் ஜஸ்டின்

மஞ்சள் மேகம்… சேலையில் மிளிரும் நடிகை ஜான்வியின் க்யூட் புகைப்படங்கள்!

போனிகபூர்- மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகளான

பழைய ஃபார்முக்கு திரும்பிய யாஷிகா… அரபிக்குத்துப் பாடலுக்கு ஆடிய வேறலெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை யாஷிகா.