விஜய்யை சந்தித்த விக்னேஷ் சிவன்! 'தளபதி 63' படத்தை இயக்குகிறாரா?

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி திருநாளில் வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' படத்தை இயக்குபவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 'சதுரங்க வேட்டை' H.வினோத், ஜெயம் ராஜா, வெற்றிமாறன் உள்பட பல இயக்குனர்கள் விஜய்யின் அடுத்த பட இயக்குனராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளாது. அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் தோளில் விஜய் கைபோட்டு நிற்கும் அட்டகாசமான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஒரு புகைப்படத்தை வைத்து 'தளபதி 63; படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் விக்னேஷ் சிவனையும் நெட்டிசன்கள் இணைத்து விட்டனர். இருப்பினும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.