விஜய்யை சந்தித்த விக்னேஷ் சிவன்! 'தளபதி 63' படத்தை இயக்குகிறாரா?

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி திருநாளில் வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' படத்தை இயக்குபவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 'சதுரங்க வேட்டை' H.வினோத், ஜெயம் ராஜா, வெற்றிமாறன் உள்பட பல இயக்குனர்கள் விஜய்யின் அடுத்த பட இயக்குனராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளாது. அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் தோளில் விஜய் கைபோட்டு நிற்கும் அட்டகாசமான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஒரு புகைப்படத்தை வைத்து 'தளபதி 63; படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் விக்னேஷ் சிவனையும் நெட்டிசன்கள் இணைத்து விட்டனர். இருப்பினும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

கார்த்தியுடன் இணைந்து நடிப்பது எப்போது? சூர்யா தகவல்

கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது...

அமீரை கொலை செய்ய முயற்சி: பாரதிராஜா திடுக் தகவல்

சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பங்கேற்றார்...

ஸ்ரீரெட்டியின் அநாகரீகமான பதிவால் டோலிவுட் அதிர்ச்சி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு பிரபல நட்சத்திரங்கள் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கூறி வரும் நிலையில்

'காலா' நான்கு நாட்கள் தமிழக வசூல் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த படம் ஒருபக்கம் ரஜினி படமா? என்றும் இன்னொரு பக்கம் ரஞ்சித் படமா?

'கும்கி' படத்தின் தொடர்ச்சியா 'கும்கி 2? பிரபுசாலமன் விளக்கம்

2012 ம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான 'கும்கி' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.