close
Choose your channels

'தல'யுடன் புகைப்படம்: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்

Saturday, November 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் 'நானும் ரெளடிதான்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களை இயக்கியவரும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவருமான விக்னேஷ் சிவன், தற்போது அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வரும் விக்னேஷ் சிவன், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்நாள் கனவு ஒன்று நனவாகிவிட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஆம், 'தல' தோனியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

தல தோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட தருணம் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என்றும், இந்த அதிசயத்தை நடக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment