மாமியாருக்கு அன்பு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம் தெரியுமா?

என்னுடைய இன்னொரு அம்மா என்று கூறி மாமியாருக்கு அன்பு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவனின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்கு பின்னர் தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று வந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஹனிமூனை முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள வினேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் உள்ளார்.

இந்த நிலையில் நயன்தாராவின் அம்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறி அவருடைய தலையில் அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓமன குரியன். என்னுடைய இன்னொரு அம்மா, நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண். எப்போதும் தூய்மையான ஆன்மாவை கொண்டுள்ள ஒரு அழகான இதயத்தை கொண்டவர். அவருக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
 

More News

'நானே வருவேன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அறிவித்துள்ளார்

'ராட்சச மாமனே, ராத்திரியின் சூரியனே.. 'பொன்னியின் செல்வன்' லிரிக் பாடல் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

அடுத்தது எதை  ஏத்த போறாங்களோ: நடிகை கஸ்தூரியின் டுவிட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருவார் என்பதும் அவரது டுவிட்டுகளுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல்

'நானே வருவேன்' முக்கிய பணி தொடக்கம்: செல்வராகவன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது

மீண்டும் ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்த ஊர்வசி ரெளட்டாலா .. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து நடிகை ஊர்வசி ரெளட்டாலா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது அவர் மன்னிப்பு கேட்டு