'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்'.. விக்னேஷ் சிவனின் பதிவு வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
’உன்னை காண ஆவலுடன் வருகிறேன்’ என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடந்த சில மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த நட்சத்திர தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்த நிலையில் அவை வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் ஒரு இடத்தில் நின்று எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த பதிவில் அவர் ’சுவாமியே சரணம் ஐயப்பா’ என்றும் ’உன்னை காண ஆவலுடன் வருகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் கவின் ’சுவாமி சரணம்’ என்று ரிப்ளை செய்துள்ளார்.
இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout