'கண்ணான கண்ணே, நீ கலங்காதே'! விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு?
- IndiaGlitz, [Monday,June 01 2020]
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்தார் என்பது தெரிந்ததே. இந்த காதல் கடந்த ஐந்து வருடங்களாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது நயன்தாராவை மறைமுகமாக குறிக்கும் வகையில் சில பாடல்களையும் கவிதைகளையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது சமூக வலைப்பக்கத்தில் ’கண்ணான கண்ணே நீ கலங்காதே’ என்ற ’நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற பாடலுடன் ஒரு வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ ஒரு திரைப்படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றபோது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் எடுத்ததாகவும் அதை தற்போது அவரே எடிட் செய்து இருந்ததாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அற்புதமாக எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோவில் உள்ள ‘கண்ணான கண்ணே’ பாடல் வரிகள் அவரது காதலி நயனை குறிப்பதாகவே நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial) on May 31, 2020 at 4:49am PDT