'அஜித் 62' படத்தில் மீண்டும் விக்னேஷ் சிவனா? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார் என்பதும் அதன் பிறகு அவர் அந்த படத்திலிருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. லைகா நிறுவனம் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அஜித் 62’ படத்தின் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன் தற்போது திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் ஆனந்தமாக சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அஜித் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஸ்மைலிகள் மூலம் விக்னேஷ் சிவன் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து மீண்டும் ’அஜித் 62’ திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகிழ் திருமேனி அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 63வது படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.