விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் 'சூரரை போற்று' நடிகர்!

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்த சூரரைப் போற்று’திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருதை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பைலட்டாக நடித்த கிருஷ்ணகுமார் என்பவர் தற்போது ஹீரோவாக உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ’ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கிருஷ்ணகுமார் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இவருக்கு ஜோடியாக பாடகி ஜொனிதா காந்தி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகி ஜொனிதா சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது தெரிந்ததே. விநாயக் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார் .

வித்தியாசமான ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது மேலும் தற்போது இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.