அரசு சொத்தை விலைக்கு கேட்டானா? இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம்..!
- IndiaGlitz, [Monday,December 16 2024]
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த செய்தி குறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தாஜ்மஹாலை விலைக்கு கேட்டதாகவும், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை விலைக்கு கேட்டதாகவும் மீம்ஸ்கள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், நான் இயக்கி வரும் ’எல்.ஐ.கே’ என்ற படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க தான் முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தேன். அப்போது எதிர்பாராத விதமாக உள்ளூர் மேலாளர் ஒருவர், அவருக்கு ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது இந்த தகவல் தவறாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் காமெடியாகவும் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அது எனக்கு உத்வேகத்தையும் அளித்தது.
ஆனால் இதையெல்லாம் தேவையற்றது. அதனால்தான் இந்த தகவலை வெளியிட்டு தெளிவுபடுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.