காதலின் கடைசி வலி: விக்னேஷ் சிவனின் உணர்ச்சிகரமான பதிவு!

விக்னேஷ் சிவன் இயக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் காதலின் கடைசி வலி என உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ . அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் படம் ரிலீசாக இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவு செய்துள்ளார். என் லவ் மற்றும் பேபி உடன் கடைசி சில நாட்கள். இந்த வலி தேவை தான். காதல் என்றாலே வலி இருக்கும். ஒரு திரைப்படம் வெளியாகும்முன் கடைசி சில நாட்கள் பிரசவ வலிக்கு இணையானது.

இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார். நேசத்துடன் இந்த படத்திற்காக அதிகம் உழைத்து உள்ளேன்’ என்று உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலகை வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்தத்தாக அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் என்பதும், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.