உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்தை தனது தாயாருக்கு தெரிவித்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது தாயார் குறித்து பெருமையாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார் என்பதும் அந்த வகையில் இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் நெகிழ்ச்சியான பதிவு செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முன்னாள் காவல்துறை அதிகாரியான விக்னேஷ் சிவனின் தாயார் மீனாட்சி குமாரியின் பிறந்த நாள் இன்று அவரது குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது:

என்னுடைய திரைப்படங்கள், வாழ்க்கை ,பாடல்கள் ஆகிய அனைத்திலும் நான் சொல்ல விரும்புவது எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய். என் வாழ்க்கையே உனக்காக நான் அர்ப்பணிக்கிறேன். ஒவ்வொரு நாளையும் ஒரு சிறப்பு நாளாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

உங்களுக்கு எல்லா பலத்தையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற இறைவனை வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் வெற்றிகரமாகவும் மாற்ற நீங்கள் எனக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தீர்கள். நீங்கள் எனக்கு கொடுத்த அனைத்து ஆதரவு மற்றும் கடினமான உழைப்பிற்காக உங்களுக்கு சிறந்த தருணங்களை வழங்கவும் மகிழ்ச்சியான வயதை காணவும் வாழ்க்கையின் அனைத்து நல் வாழ்வை அனுபவிக்கவும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். எனது மீனாகுமாரி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்