விடியற்காலை 3 மணிக்கு நயனுக்கு விக்கி போட்ட மெசேஜ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு போட்ட மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த மெசேஜில், ‘கடவுளுக்கு நன்றி! என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்தது, அதற்கும் நன்றி! நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நல்ல நிகழ்வுகள், நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதங்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நடந்த அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக்கியது. அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

என் தங்கமே! இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாற போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்’ என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

நயன்தாரா திருமணத்திற்காக தனி விமானத்தில் வந்தாரா அஜித்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட் செய்யாத 'விக்ரம்' படத்தின் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

'மாயோன்' படத்தின் சூப்பர் புரமோஷன்: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமை!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக 'மாயோன்' படத்தின் புரமோஷன் செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷின் பள்ளித்தோழி இவர்தான்: வைரல் வீடியோ

தனுஷின் பள்ளிக்கால தோழி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

24 மணி நேரமும் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி:  தியேட்டருக்கு பொருந்துமா?

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை தற்போது பார்ப்போம்.