close
Choose your channels

அஜித் படம் மிஸ் ஆனால் என்ன? 'தல' படத்தை டைரக்டர் செய்யும் விக்னேஷ் சிவன்..!

Tuesday, October 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அவர் தல தோனி நடிக்க உள்ள விளம்பர படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதனை அடுத்து அவர் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு தற்போது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தல தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தல அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்தால் என்ன, தற்போது தல தோனியை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment