நயன்தாராவை 'தங்கமே' என ஜொலிக்க வைத்த விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Monday,November 19 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குனரும், நயன்தாராவின் காதலர் என்று கூறப்படுபவருமான விக்னேஷ் சிவன் நேற்று தனது அன்புக்குரியவருக்கு வித்தியாசமாக தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நயனின் பிறந்த நாளையொட்டி அழகிய வேலைப்பாடுகளுடன் விக்னேஷ் சிவன் உருவாக்கிய பிரமாண்ட கேக்கில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் சினிமாவில் பயன்படுத்தும் கேமிரா, கிளாப் போர்டு ஆகியவையும் அந்த கேக்கில் இருந்தது. கிளாப் போர்டில் 'ஹேப்பி பர்த்டே நயன்தாரா' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. அதற்கு கீழே 'வித் லாட் ஆஃப் லவ்' என்ற வரி அவருடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும் கேக்கின் பின்னே 'தங்கமே' என்ற எழுத்துக்கள் தங்கம் போல் ஜொலித்து கொண்டிருந்தது. நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய கேக்கின் புகைப்படம் மற்றும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி திடீர் நீக்கம்: மீடூ விவகாரம் காரணமா?

கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் யூனியனுக்கு இரண்டு வருடங்களாக சந்தா கட்டவில்லை

36 வருடங்களுக்கு பின் வித்தியாசமான டைட்டிலில் சத்யராஜ்

சத்யராஜ் நடித்து வரும் புதிய படம் ஒன்றுக்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவின் அடுத்த திரைப்பட ரிலீஸ் தேதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில்

விஜய்சேதுபதி படத்தில் நீதிபதியாக நடிக்கும் பிரபல இயக்குனர்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தினமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் இந்த ஆபத்தை உணர வேண்டும்: எஸ்.ஆர்.பிரபு கோரிக்கை

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளியன்றும் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி இருந்தும் ரிலீசூக்கு தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.