திடீரென விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு.. நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,December 01 2024]

இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு காரணமாக நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கராஜன் நடித்து வரும் 'எல்.ஐ.கே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ’நானும் ரவுடிதான்’ படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட மூன்று பக்க அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்காக காரசாரமான கருத்துகள் பதிவாகி வந்தன.

இந்நிலையில் திடீரென, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. எனினும், தனுஷ் குறித்து அவர் பதிவு செய்த கருத்துகளுக்கு பதிவான கமெண்ட்கள் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அவர் தனது ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

தனக்கு தேவையான பதிலை போட்டியாளர் வாயில் இருந்து வர முயற்சி செய்கிற விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி பல நேரங்களில் ஒரு சார்பாக முடிவெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது.

கமல் அருமை இப்போதுதான் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுக்கப்படும் விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனில் அவர் விலகி கொள்ள அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்தார்

பொய் மேல் பொய்களை அடுக்கி கொண்டே போகும் அருண்.. ரசிகர்கள் போட்ட குறும்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது விஜய் சேதுபதி குறும்படம் போட்டாலும் பார்வையாளர்களே சமூக வலைதளங்களில் போடும் குறும்படம்

2025-ல் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது? ஆதித்ய குருஜியின் விரிவான ராசி பலன் இதோ!

மேஷம் முதல் மீனம் வரை, ஒவ்வொரு ராசிக்கும் 2025-ல் என்னென்ன நிகழும் என்பதை ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்தவர் வாழ்க்கையை அழிக்க நினைத்தால், அது வட்டியுடன் உங்களை வந்தடையும்: நயன்தாரா

'பொய்கள் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழிக்க நினைத்தால், அது கடன் பெற்றது போல வட்டியுடன் உங்களை வந்தடையும்' என்ற பழமொழியை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம்