close
Choose your channels

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. அடுத்த படம் என்ன தெரியுமா?

Saturday, February 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் ’ஏகே 62’ என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டதால் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை என்பதும் ’ஏகே 62’ படத்தை இயக்கும் புதிய இயக்குனர் யார் என்பது குறித்த தகவலையும் இன்னும் பட குழுவினர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களின் பட்டியலையை பதிவு செய்திருந்த நிலையில் அதில் ’ஏகே 62 ’படத்தையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’ஏகே 62’ படத்தை நீக்கிவிட்டு நீக்கிவிட்டார். இதனை அடுத்து அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது அடுத்த படத்தை ’விக்கி 6’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து விரைவில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’ஏகே 62’ படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க அதிக வாய்ப்பாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியும் தொடங்கி விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment