'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்
- IndiaGlitz, [Saturday,October 27 2018]
இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடர் தொடங்கவுள்ளது. அதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இந்திய அணி டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்திய டி-20 அணி அறிவிப்பு வெளியானது. இந்த அணியில் 'தல' தோனி நீக்கப்பட்டிருந்தார். தோனியின் நீக்கத்திற்கு அவரது அபிமானிகள், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய தொடருக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் கேப்டன் விராத் கோஹ்லிக்கு தேவைப்படும் என்றும் அதை அவர் உணரும் காலம் வரும் என்றும் கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், 'தல' தோனியின் நீக்கம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்டு இதயமே நொறுங்கி போனது. மிக மோசமான செலக்சன் கமிட்டியின் முடிவு இது. ஆண்டவன் தான் உங்களை காப்பாத்தணும் பிசிசிஐ! தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட பிடுங்க முடியாது. நினைவில் வைத்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.