தோண்டி துருவாமல் படத்தை ரசியுங்கள்: காப்பான் விமர்சகர்களுக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்
- IndiaGlitz, [Monday,September 23 2019]
கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் காப்பான் திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர் கொடுத்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதில் என்ன குறை இருக்கின்றது என்று தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளிபடுத்த, திரைப்படங்களை தோண்டித் துருவி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தக் காலத்தில் சாதாரணப் பொதுமக்கள் கூட விமர்சகர்களாகி விடுகிறார்கள். படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம். தோல்விகளை மன்னிப்போம். இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது?
‘காப்பான்’ திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும், குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கும் நல்ல படமாகும். சூர்யாவின் அபாரமான நடிப்பு, கேவி ஆனந்த் அவர்களின் ட்விஸ்ட் மட்டும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பிரச்சனைகளை ஒரு பிரதமர் மேற்கொள்ளும் விதம் மற்றும் அனைத்து அம்சங்களும் அடங்கிய ஒரு நல்ல படம். இந்த படத்தில் உள்ள குறைகளை பெரிதாக்காமல் குடும்பத்துடன் சென்று ரசிக்கவே தரிசிப்பதே சிறந்தது என்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
My thoughts on #Kaapaan !@Suriya_offl @LycaProductions @anavenkat @Jharrisjayaraj @arya_offl @rajsekarpandian @KiranDrk good job ???? #AnbaanaFans ????????
— Vignesh Shivan (@VigneshShivN) September 21, 2019
Enjoy the weekend with #Kaapaan & your family ????????
Watching #OththaSeruppuSize7 tomo ???? for @rparthiepan sir pic.twitter.com/6rkHdfoLmj