'என்ன கொடுமை இது': நயன்தாரா கெட்டப் போட்ட பிக்பாஸ் நடிகை குறித்து விக்னேஷ் சிவன் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்ட்ஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த வாரம் ’ஆஹா கல்யாணம்’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திருமணம் நடக்கும் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர் ஆர்த்தி, நயன்தாரா கெட்டப்பில் மணப்பெண் வேடத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். இதில் அவர் ‘என்ன கொடுமை இது’ என்று கேப்ஷனாக பதிவு செய்த நிலையில், இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார்

விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.