வயிறு எரியுது: விஜய்-தோனி புகைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் கமெண்ட்
- IndiaGlitz, [Thursday,August 12 2021]
தல தோனி இன்று தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய் மற்றும் படக்குழுவினர்களை சந்தித்தார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் மற்றும் தோனி தனியாக உட்கார்ந்து பேசியதன் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களும் தல தோனி மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது கமெண்ட்டை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது. அட்லீஸ்ட் நான் தல, தளபதியுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்தாவது எனக்கு அனுப்பு என்று நெல்சன் திலீப் குமாரிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் சற்று நகைச்சுவையுடன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Oru vaartha…. Sollirukalaam…. !!!
— Vignesh Shivan (@VigneshShivN) August 12, 2021
Stomach temperature 274 degree Celsius at the moment ????????!!
Send me the raw file Nelson Dilip kumar …. will atleast do photoshop version for me … ???????????????? https://t.co/NgSCrLn3t4