'எல்.ஐ.சி' படத்தில் கேரக்டரை மாற்றிய விக்னேஷ் சிவன்.. தர்மசங்கடத்தில் சீமான்?

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்.ஐ.சி’ என்ற திரைப்படத்தில் சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது அவருடைய கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் சீமான் தர்ம சங்கடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’எல்.ஐ.சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே உள்ள ஈஷா தியான மையத்தில் நடந்தது என்பதும் அதில் சீமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மட்டுமே சீமானிடம் விக்னேஷ் சிவன் கால்ஷீட் பெற்ற நிலையில் தற்போது அவரது கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும் கேரக்டர் என்பதால் அவரிடம் கூடுதலாக கால்ஷீட் கேட்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சீமானுக்கு இதில் சந்தோஷம் தான் என்றாலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணிகள் இருப்பதால் கூடுதலாக எப்படி கால்ஷீட் கொடுப்பது என்று தர்ம சங்கடத்தில் சீமான் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விக்னேஷ் சிவனுக்காக அவர் கூடுதல் நாட்கள் கால்ஷீட் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

விஜய் அடுத்த படத்தில் விஜயகாந்த்.. தளபதியின் வேற லெவல் மாஸ் திட்டம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அவருடைய கேரக்டரை ஏஐ மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. க்ளீன் 'யூ' சான்றிதழ்.. பா ரஞ்சித்தின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யாமல் ஒரு வசனத்தை கூட மியூட் செய்யாமல் கிளீன் 'யூ' சான்றிதழ்

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில்,

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், M.சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரில்லர் டிராமா

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' பர்ஸ்ட் லுக் தேதி இதுவா? அன்று என்ன விசேஷம்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'எஸ்கே 21' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 17ஆம் தேதி வெளியாகும்

மறுவெளியீட்டிற்கே இந்த அக்கப்போரா? திரையரங்கில் தீ வைத்து கொண்டாடிய ரசிகர்கள்..!

பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரபல நடிகரின் திரைப்படம் ஒன்று மறு ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தினத்தில் ரசிகர்கள் தியேட்டரில் தீ வைத்து அந்த தீயைச் சுற்றி நடனமாடும்