இரண்டு கைகளில் இரண்டு குழந்தைகள்.. விக்னேஷ் சிவனின் 'தந்தையர் தினம்' கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

இரண்டு கைகளில் இரண்டு குழந்தைகளை ஏந்தியவாறு இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்தையர் தினத்தை கொண்டாடிய புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இதனை அடுத்து இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பதும் தெரிந்ததே.

அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் தினத்தின் போது இரண்டு குழந்தைகளின் முகத்தையும் அவர் காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும், தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்து வருகின்றனர்

அந்த வகையில் விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளை இரண்டு கைகளில் ஏந்தி தந்தையர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார். மேலும் அந்த அறை முழுவதும் பலூன்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவின் கேப்ஷனாக, ‘வாழ்க்கை என்பது மிகவும் அழகானது, அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள், அதிகம் புகழப்படாத உண்மையான ஹீரோக்கள் தந்தையர்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.