'இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்'.. நயன் அம்மாவை வாழ்த்தும் நெட்டிசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாராவின் அம்மா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவில் 'இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்’ என நெட்டிசன்ஸ் கமென்ட் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனக்குரியன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்னுடைய ஆத்தா அம்மா ஓமனக்குரியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடைய அன்பு மிகவும் அளப்பரியது. நீங்கள் தான் எங்களுடைய மிகப்பெரிய வலிமையான சொத்து.
உங்கள் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தான் எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. உங்களை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். நான், நயன்தாரா மற்றும் உயிர், உலகு ஆகியோர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் நயன்தாரா அவருடைய அம்மாவுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவுக்கு இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும் என்பது உட்பட பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com