வார்த்தைகளால் கொஞ்சி நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவை வார்த்தைகளால் கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கண்மணியே, தங்கமே, என் எல்லாமே! நீங்கள் எப்பொழுதும் ஆசிர்வதிக்கப்பட்டவாராகவும், அழகாகவும், தனித்துவம் உடையவராகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களுடைய வாழ்க்கை முழுவதும் வெற்றி மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy birthday Kanmani Thangamey my ellamey ??????????????☺️☺️☺️????????????????
— Vignesh Shivan (@VigneshShivN) November 17, 2021
Stay blessed and be the same unique , beautiful , powerful , strong person that u r , forever ??????
Cheers To a life filled with only success & happy moments ??☺️??
Godbless you #HBDNayanthara pic.twitter.com/3z4zFZ7ZAK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout