close
Choose your channels

இரட்டை குழந்தைகளுடன் விக்கி-நயன் தம்பதிகள்.. செம புகைப்படம்

Monday, January 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான விக்னேஷ் சிவன் - நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் அதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் தனது குழந்தைகளின் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் தம்பதிகள் இருவரும் புன்சிரிப்புடன் இரட்டை குழந்தைகலுடன் இருப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. குறிப்பாக இரட்டை குழந்தைகள் ஒரே டிசைனில் வெள்ளை உடைகள் அணிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சபரிமலை சென்று திரும்பிய நிலையில் அடுத்த கட்டமாக ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.