உயிர் மற்றும் உலகம் உடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நயன்தாரா.. க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவாக தனது மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய ஒரு சில நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜவான் படத்தின் டிரைலர் உள்பட ஒரு சில வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தனது மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் மகன்கள் ஆன உயிர் மற்றும் உலகம் ஆகிய இருவரும் கிருஷ்ணர் வேடமிட்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படத்திற்கு ஐந்து லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது