கண்மணி அன்போட காதலன் நான் எழுதிய டயலாக்: டப்பிங்கில் விக்னேஷ் சிவன் - நயன் ரொமான்ஸ்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இருவரும் இணைந்து பணிபுரியும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் டப்பிங்கின்போது இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன.

முதல் கட்டமாக நயன்தாரா தனது பணியை தொடங்கி உள்ளார். பெரும்பாலான படங்களில் நயன்தாரா டப்பிங் செய்வதில்லை என்ற நிலையில் இந்த படத்தில் அவரே தனது கேரக்டருக்கு டப்பிங் குரல் கொடுப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக்கை, நீயே டப் பண்றது மிகுந்த சந்தோசம்’ என தெரிவித்துள்ளார். நயன் தாரா டப்பிங் செய்யும் சில புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது எனப்து குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.