நயன் - விக்னேஷ் புத்தாண்டு கொண்டாட்டம் எந்த நாட்டில் தெரியுமா? க்யூட் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தை வெளிநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் அவர்கள் கொண்டாடி உள்ள நிலையில் இந்த கொண்டாட்டம் குறித்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மிகச்சரியாக 2022ஆம் ஆண்டு அதிகாலை 12 மணிக்கு பிறக்கும்போது துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தின் முன்பாக இருவரும் கட்டிப் பிடித்தவாறு புத்தாண்டை கொண்டாடிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட மொத்தம் 5 திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் திரையுலகில் ஹீரோவாக வாய்ப்பு பெற்றுள்ளவர் அஸ்வின் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள 'என்ன சொல்லப் போகிறாய்'

திரையரங்குகளில் மீண்டும் 50% பார்வையாளர்கள்: 'ஆர்.ஆர்.ஆர்.', 'வலிமை' ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சற்றுமுன் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பீஸ்ட்' ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

பிரபலங்கள் பரிந்துரை செய்த புத்தகங்களின் வரிசை!

சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வாசகர்கள் பலரும் புத்தகங்களைக் குறித்து ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில்

வாசிப்பு திருவிழா… தமிழில் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 6 துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வார நாட்களில் மதியம் 3-இரவு 8.30