விக்னேஷ் சிவன் - நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
2020 என்ற ஒரு கடினமான ஆண்டை மனித இனமே கடந்து இன்று 2021 என்ற புத்தாண்டை வரவேற்று உள்ளது. 2020ஆம் ஆண்டு அனைவருக்கும் சோதனையான ஆண்டாக இருந்த நிலையில் இன்று முதல் தொடங்கும் 2021 ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று பிறந்துள்ள 2021 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் இன்றைய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். அதேபோல் மறக்கமுடியாத 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம். சிறந்த தருணங்கள், வெற்றி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி, திருப்தி மற்றும் அன்பு ஆகியவற்றுடன் இந்த அற்புதமான 2021ஐ நோக்கி செல்லும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்
விக்னேஷ் சிவனின் வாழ்த்துக்களும் நயன்தாராவுடன் அவர் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com