விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து பணிபுரியும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்த ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு சில படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் ’ராக்கி’.
இயக்குனர் இமயம் பாரதிராஜா, தரமணி புகழ் வசந்த் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வரும் 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டராக நடித்து உள்ளார் என்றும் அவருடைய கேரக்டர் படத்தில் முதுகெலும்பு போல் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகிய இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் நாகூரான் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The raw and gritty world of Rocky is making its way to theatres! Rowdy Pictures is proud to present this one of a kind film.
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) December 6, 2021
Make your way to the theatres and witness the world of Rocky from December 23rd.#RockyTheFilm@vigneshshivan #Nayanthara pic.twitter.com/twjDvdT5WK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments