'அஜித் 62' படப்பிடிப்புக்கு முன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணமா? 

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள் என்பதும் சமீபத்தில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறினார் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் வரும் 28ஆம் தேதி ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீசானதும் திருமண வேலைகள் தொடங்க இருப்பதாகவும் அனேகமாக ஜூன் மாதம் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

நயன்தாராவின் சொந்த ஊரில் தான் திருமணம் நடைபெறும் என்றும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு ‘அஜித் 62’ பட வேலைகளை தொடங்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

More News

அமிதாப், ரன்வீர்சிங்கை அடுத்து கார்த்தி தான்: சொன்னது யார் தெரியுமா?

அமிதாப் பச்சன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர்களை அடுத்த கார்த்தியுடன் பணி புரிவதையே நான் மிகவும் விரும்புகிறேன் என பிரபல ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார் .

இளையராஜாவை விமர்சித்த அரசியல்வாதியை கண்டித்த பா ரஞ்சித்!

இசைஞானி இளையராஜாவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த அரசியல்வாதிக்கு பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சையா? சிறந்த மருந்து இதுதானாம்!

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரே சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்

கே.எஸ்.ரவிகுமாரின் 'கூகுள் குட்டப்பா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே எஸ் ரவிக்குமார் நடித்து தயாரித்த 'கூகுள் குட்டப்பா'  படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

அஜித், சூர்யா, சிம்புவுக்கு படம் பண்ணுவது உண்மையா? சுதா கொங்காரா பேட்டி

சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே