விக்னேஷ் சிவனை இறுக்கி கட்டியணைத்த நயன்: செம கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படம்

கடந்த மாதம் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது நயனுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்ற ’நான் பிழை’ பாடலின் வரியான ‘நினைச்சா தோணும் இடமே’ என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் என்பதும் இந்த ரொமான்ஸ் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ’நான் பிறந்த தினமே’ என்ற அதே பாடலின் வரியை கேப்ஷனாக பதிவு செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனை நயன்தாரா இருக்க கட்டி அணைத்தவாறு உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை தொடர்ந்து கேப்ஷனாக கொண்டு விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நாளை என்ன புகைப்படத்தை வெளியிட போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

More News

கமல் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை: ‘விக்ரம்’ குறித்து சூப்பர்ஸ்டார் நடிகர்!

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு ஆபத்தா? நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் சில பகுதியை கைப்பற்ற சென்னை மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்முறையாக ஏவிஎம் தயாரிப்பில் அருண்விஜய்: நாளை டீசர் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்

5 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்த ரம்பா: என்ன படம் பார்த்தார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ராக்கெட்டரி - யானை - டிபிளாக்: இந்த வார ரிலீஸில் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது: 

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருண் விஜய்யின் 'யானை' மாதவன் நடித்த 'ராக்கெட்டரி'