உலகப்புகழ் பெற்ற ஹனிமூன் நகரத்தில் விக்னேஷ்சிவன் - நயன்தாரா
- IndiaGlitz, [Monday,June 10 2019]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலர்களாக உலகம் முழுவதும் அவ்வப்போது சுற்றி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த காதல் ஜோடி உலகின் முக்கிய சுற்றுலா நகரமான சாண்டோரினி என்ற நகரில் உள்ளனர். கிரேக்க நாட்டில் உள்ள இந்த நகரம் புதுமண தம்பதிகள் பலர் தேனிலவு செல்ல தேர்வு செய்யும் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் இருந்து சானிடோரினி நகரம் செல்வதற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட விமான டிக்கெட்டை விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து 'நான் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவுப்பகுதிக்கு பறந்து கொண்டிருக்கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on InstagramFlying towards #santorini @cavotagoosantorini ???????????? #santorini #dreamdestination #vacayMode
A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Jun 8, 2019 at 4:09am PDT