விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது சகஜம் தான். ஆனால் இருவரும் சேர்ந்து ஒருவருக்கு முத்தம் கொடுத்து உள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனின் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சேர்ந்து முத்தம் கொடுத்துள்ளனர். மேலும் நயன்தாராவை அன்போடு விக்னேஷ் சிவனின் அம்மா அரவணைத்து இருக்கும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது: அம்மா, உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பை தினந்தோறும் வெளிப்படுத்துவதே என் வாழ்க்கை. என் வேலை, என் கலை எல்லாவற்றிலும் நீங்கள் உடன் இருப்பீர்கள், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் மீது அன்பை நான் வெளிப்படுத்துவேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியில் அஜித்தின் ‘வலிமை’ படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ என்ற பாடல் ஒலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.