விக்கி-நயன் திருமணம்: வெளியான முதல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை நடந்த நிலையில் இந்த திருமணத்தின் முதல் புகைப்படத்தை போட்டோகிராபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது நடைபெறுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலர்களாக இருந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். இதனை அடுத்து திருமணத்திற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது திருமணத்திற்கு வருபவர்களுக்கு மிகச்சிறந்த உபசரிப்பு மற்றும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை இந்து முறைப்படி சிவாச்சாரியார்களின் ஆசிர்வாதத்துடன் மிகவும் சிறப்புடன் திருமணம் நடந்து முடிந்தது. அந்த திருமணத்தை நடத்தி வைத்த ஐயர்,ஜோடிப்பொருத்தம் பிரமாதமாக இருப்பதாகவும் இந்த ஜோடி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்றும் ஆசீர்வதித்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தின் முதல் புகைப்படத்தை பிரபல போட்டோகிராஃபர் ஜோசப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் நயன்தாரா திருமணத்திற்கு அணிந்திருந்த சிகப்பு நிற உடை மற்றும் நகைகள், விக்னேஷ் சிவன் பட்டு உடை ஆகியவை மிகவும் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விக்னேஷ் சிவன் தனது அன்பின் வெளிப்பாடாக நயன்தாராவின் நெத்தியில் முத்தமிட்டவாறு இருக்கும் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.